அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் அரங்க கோபு,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ச.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக அரியலூர் மாவட்ட செயலாளர் க.கோவிந்தராஜ்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் சி முத்தமிழ் செல்வன், தேசிய ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பெ ஆசை தம்பி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆ. சண்முகம், தொழிற்பயிற்சி அமைச்சு பணியாளர் சங்கத்தின் மண்டல தலைவர் அ. முருகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெ. கல்பனா ராய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,முதுநிலை இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும்,சரண்டர் ஒப்படைப்பு வழங்கிட வேண்டும்,21 மாத கால நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்,பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்,அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்,அனைத்து துறை ஊழியர்களுக்கும் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு தலை முடியை ஊதியம் வழங்கிட வேண்டும் தனியார் மையம் மூலம் பணி நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்நிகழ்வில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் இரா அருமைக்கண்ணு,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் ச. கோபிகிருஷ்ணன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சு.மணிவண்ணன்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெ. சாமுவேல், வேளாண்மை உதவி விதை அலுவலர் சங்கம் நிர்வாகி மு கண்ணன்,கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தே கல்விச்செல்வன்,கல்வித்துறை மண்டல செயலாளர் க. செந்தில்குமார், தமிழ்நாடு அரசுகிராம சுகாதார செவிலியர் நல சங்க நிர்வாகி இரா வசந்தி,பொது நூலகத்துறை மாவட்ட நிர்வாகி ந. செசி ரா பூ,தமிழ்நாடு பொதுப்பணி துறை மற்றும் நீர்வள துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் மாவட்டத் துணைத் தலைவர் மு ஆனந்தன்,தமிழ்நாடு நகராட்சி கூட்டமைப்பு நிர்வாகி சி முருகேசன்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் துணைத் தலைவர் ந. கண்ணதாசன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ந. மேகநாதன்,அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர் சம்மேளத்தின் நிர்வாகி மாரிமுத்து, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ச. சங்கீதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் உதவியாளர் சங்க நிர்வாகி ப. ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் முடிவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயலாளர் ப. இராஜா நன்றி கூறினார்.

Share this to your Friends