தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் முடிவை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்:
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து தருகின்றார்கள்.
13 ஆண்டை கடந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது 12,500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.
விலைவாசி உயர்வில் அவர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரம் மற்றும் பணி பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பாக, 2026ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற வேண்டும் என போராடி வருகின்றார்கள்.
—
எஸ்.செந்தில் குமார்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
செல்:9487257203