பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் உள்ள சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளித் தாளாளர் அப்துல் ரவூப் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாணவ மாணவிகள் தனியார் பள்ளிக்கு எதிராக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடனம், விதவிதமாக வேடமணந்தும், நாடகம், சாகச உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்தினர்.இந்நிகழ்ச்சியில்பஷீர் அகமது,முகம்மது அபூபக்கர்,முஹம்மது ஜாபர் சாதிக் மற்றும் பாலிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.