தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது வளைவில் திரும்ப முயன்ற போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து வெளியே சென்ற வாகன ஓட்டிகள் வேனில் பயணித்தவர்களை பத்திரமாக மீட்டனர் மேலும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தேனில் பயணித்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவிநாசி பாளையம் போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.