தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர்கள் உள்பட 2000 பேர் பணியாற்று வருகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு அரசு அறிவித்துள்ள சம்பளத் தொகை வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்
அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் பெயரில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் ஒவ்வொரு மண்டலமாக சென்று அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் சம்பள உயர்வு அறிவித்து தங்களுடைய குறைகளையும் கேட்டு அறிந்தார்
தூய்மை பணியாளர்கள் மத்தியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் தூய்மை பணியாளர்களுக்கு 39 ரூபாய் வித்தியாசம் இருந்தது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது ஒப்புதல் நடத்தப்பட்டுள்ளது ஐந்தாம் தேதி அனைவருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் ஏறிவிடும் சம்பள உயர்வு 39 ரூபாய் ஆறாம் தேதி இன்ஸ்டிவாக உங்களது வங்கி கணக்கில் ஏறும் அதே மாதிரி தூய்மை பணியாளர்கள் தற்போது கோடை காலம் என்பதால் விரைவாக காலையில் சீக்கிரமாக பணிக்கு வந்து சீக்கிரமாக நீங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் வீடுகளில் குப்பைகளை பிரித்துக் கொடுக்க வேண்டும்
பிரித்துக் கொடுக்காத வீட்டின் உரிமையாளர்களிடம் நீங்கள் யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் சூப்பர்வைசர் புகார் அளியுங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி புகார் எனக்கு நீங்கள் புகார் தெரிவித்தால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து தராத வீடுகளை அடையாளம் கண்டு நீங்கள் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும அப்போது அங்கு இருந்த தூய்மைப் பணியாளர்கள் லாரியில் எங்களை குப்பையை ஏற்ற சொல்கிறார்கள்
என்று தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் கூறினார்கள் உடனடியாக அவர் லேண்ட் நிறுவனத்தின் மேலாளரை அழைத்து ஆண்களை வைத்து தான் லாரியில் குப்பைகளை ஏற்ற வேண்டும் பெண் தூய்மை பணியாளர்களை வைத்து ஏற்ற கூடாது என்று அதிரடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார் மேலும் தூய்மை பணியாளர்களிடம் ஒவ்வொரு மண்டலமாக சென்று சம்பள உயர்வு அறிவித்து குறைகளையும் கேட்டறிந்தார்