பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம்
பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சிபிஎஸ் சந்தா இறுதி தொகை வழங்க கோரி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் கார்த்திக் தலைமையில் பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில்
அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தில் நிலைமையாக உள்ளதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரியும், 17.02.2024 -ல் அன்று சென்னை எழிலகத்தில் நடைபெற்ற 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்னளில் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் நான்கு மாதத்தில் திரு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஒத்துக் கொண்ட வருவாய் நிர்வாக ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மேலும் அலுவலக உதவியாளருக்கு இணையாக வரவேற்கப்பட்ட காலம் வரை ஊதியம் ரூ.15,700 ஊதியம் வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட ஏராளமானோர் இரவு முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் வட்ட பொருளாளர் மேகநாதன் வட்டச் செயலாளர் மனோகரன் முன்னாள் மாநில செயலாளர் முருகேசன், மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களான பலர் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.