திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமலாபுரம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வசந்தகுமாரியின் பெரியப்பா ஆறுமுகம் 63 என்பவர் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது

இதன் காரணமாக அப்பன் வசந்தகுமாரிடம் பேசாமல் தவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியப்பா ஆறுமுகத்தை கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் அருகில் எரிந்து கொண்டிருந்த குப்பையில் தள்ளி விட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மங்களம் போலீசார் தலைமறைவாக உள்ள வசந்தகுமாரை தேடி வருகின்றனர். மேலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியப்பாவை மகனே தாக்கி நெருப்பில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *