பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா…
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை 108-சிவாலயம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு வீரமகா காளியம்மன் திருக்கோயில் ஆலயத்தின் படுகளம் ஏறுதல் மற்றும் திருநடன திருவீதியுலா காட்சி நடைபெற்றது. அம்மன் சன்னதிலிருந்து மேளதாளங்கள் முழங்க படுகளத்தில் ராஜா ராணி ஏறி திரு நடனம் ஆடியவாரு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை வீரமகா காளியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.