கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
சுங்கச்சாவடி கட்டணம் நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் பல்லடம் அருகே உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் கார் ஒரு முறை பயணிக்க2.50 ரூபாய் முதல் கனரக வாகனங்களுக்கு 10 ரூபாய் வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஒரு முறை கட்டணம் இரு வழி மற்றும் மாதாந்திர கட்டணம் என அனைத்து வகை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.