இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம்
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா வருகின்ற 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விநாயகர், முருகர் தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களில் தேர் கட்டுமானப் பணி நிறைவு பெற்று உள்ளது. மற்ற குதிரை பொம்மைகள் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று வசந்த பெருவிழா எனப்படும் அருள்மிகு தியாகராஜர் யதஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் அஜபா நடனத்துடன் எழுந்தருளும் நிகழ்வு இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் ஆழித்தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.