பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமத்தி வேலுாரில் தனியார் சவுத் இந்தியன் ரெசிடென்சியில் நேற்று நடந்தது.
இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி மற்றும் நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்கள்
மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன், நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சித்தார்த்தன், செயலாளர் வையாபுரி, ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில், வரும் மே 11 ம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் வன்னியர் சங்க இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர் .