கோவை டிரினிட்டி பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை ராமநாதபுரத்தில் டிரினிட்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.மழலையர் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் டாக்டர் தனலட்சுமி வரவேற்புரை ஆற்றிய இதில் சிறப்பு விருந்தினராக ஆயர் சிஸ்டர் ஷாலினி,சி.எம்.சி.கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து வாழ்த்தி பேசினார்.
பள்ளி தாளாளர் மார்ட்டின் மற்றும் செயலாளர் குறியாச்சன் விழாவில் சிறப்புரையாற்றி மாணவர்களையும், ஆசிரியர்களையும் மற்றும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி பேசினர்.
டிரினிட்டி பள்ளி குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு எண்ணற்ற செயல்பாடுகளின் மூலம் பயிற்சி அளித்து வருகின்றனர் என பள்ளியின் தாளாளர் மார்ட்டின் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் கண்களை கவரும் விதமாக மழலையர் பள்ளியின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அமைந்தது.இதில் மழலையர் பள்ளியின் மாணவர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைவரையும் அசத்தினர். எல் கேஜி மற்றும் யூ கே ஜி மாணவர்கள் சமூகத்திற்கு தேவையான சாலை பாதுகாப்பு,துரித உணவுகளை தவிர்க்கவும், நல்ல பெற்றோர்,பாகுபாட்டைத் தவிர்க்கவும்,வாழ்க்கையில் சரியான ஜோடிகள், மொபைல் போன்களைத் தவிர்க்க வேண்டும் ,போன்ற கருத்துகளை தங்களது செயல்பாடுகளின் மூலம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தினர். இந்நிகழ்ச்சி குழந்தைகளின் திறனை வெளிப்படுத்த சிறந்த தளமாக விளங்கியது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு மிகுந்த மகிச்சியோடு பள்ளியின் முயற்சியை பாராட்டினர்.இந்த விழாவில் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.