கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா …..
நடன இயக்குனர்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடி அசத்திய பள்ளி குழந்தைகள்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேனாம்படுகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை நளினிதேவி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தீபா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருப்பையன் ,வட்டார கல்வி அலுவலர் மதியழகன், ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக கல்வி மற்றும் விளையாட்டு, வேலைவாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இதில் மாணவ மாணவிகள் பட்டிமன்றம், கோலாட்டம், கரகாட்டம் கண்கவரும் வகையில் பல்வேறு நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடன இயக்குனர்களுக்கு நிகராக ஆடி அசத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.