தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக மேயர் சண்.இராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலைவகித்த கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழு தலைவர் வெங்கடேசன் தாக்கல் செய்தார்.
மாநகராட்சியின் 20-வது வார்டின் அதிமுக மாமன்ற உறுப்பினர் சரவணன், தன் பகுதியில் நடைபெறாத பணிகளுக்கு எதிராக, பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து, பிச்சை எடுக்கும் வகையில் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக உறுப்பினர்கள் மேயர் சண்.இராமநாதனுக்கு எதிராக சுமார் ஒரு கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர், அதனை அடுத்து அதிமுக உறுப்பினரும் எதிர் கட்சி தலைவர் கே.மணிகண்டன் இன்று ரூ.15 கோடி அளவிற்கு உபரி பட்ஜெட் என தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இவ்வளவு பணத்தை முறையாக வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்தவில்லை. எந்த வார்டுகளிலும் சரிவர அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை உபரி பட்ஜெட் வெறும் கண் துடைப்பு தான். மாநாட்டு அரங்கை இடித்துவிட்டு பணிகள் நடக்கிறது. அதில் முறைகேடுகள் நடந்துள்ளது என ஆளும் கட்சி கவுன்சிலர்கள் சிலரே புகார் கூறிய அவர் தலைமையில் எழுந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட மாநாட்டு கட்டடத்தை திரையரங்கமாக மாற்றுவதற்கு திமுக மேயர் மற்றும் ஆணையர் ஒரு கோடி ரூபாய் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கலைவாணி, ஜெய் சதீஷ் ஆகியோரும் கோஷம் எழுப்பினர்.
இதனிடையே, மாமன்ற உறுப்பினர் சரவணன் தன் வார்டின் அடிப்படை பணிகள் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். பாதாள சாக்கடைகளின் மூடியுகள் உடைந்துவிட்டன, இதனால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என்று அவர் கூறி, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் சொந்த செலவில் பணிகளை செய்து வருவதாக கூறினார்.
இந்த நிகழ்வு மாமன்ற கூட்டத்தில் பெரிய பரபரப்பை உருவாக்கி, அதை தொடர்ந்து மேயர் கூட்டம் முடிந்ததாக கூறி வெளியேறிவிட்டார்.