
உலக மகளிர் தின விழா” சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு (S.A. Colony ALF) மகளிர் சுய உதவிக் குழு சார்பில் உலக மகளிர் தின விழா 3 ம் ஆண்டு மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 36 ஆவது வார்டு கவுன்சிலர் ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்களும், முக்கிய பிரமுகர்களும், 600க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவைச் சேர்ந்த கலந்து கொண்டனர். 40 மகளிர் குழுக்களை வழி நடத்தும் மேம்பட்ட மாபெரும் தலைவி எஸ். சபர்நிஷா B.A., CRP அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள். பல போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ரீட்டா நன்றி கூறினார்