தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேனகா மில் மைதானத்தில் நடைபெற்று வரும் 2025 3 ஆவது ஆண்டில் நடைபெற்று வரும் பொது நூலக இயக்ககம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கடந்த 23.3
2025 ஞாயிற்றுக்கிழமை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜ. பெரியசாமி தொடங்கி வைத்து நடைபெற்று வருகிறது இந்த புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் குறிப்பாக துவக்கப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளிகள் படிக்கும் மாணவ மாணவிகளும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்
தினந்தோறும் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் கவிஞர்கள் எழுத்தாளர்களின் இலக்கிய அரங்கம் முக்கிய பிரமுகர்களின் சிறப்புரைகளும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன புத்தகம் வாசிப்பை தமிழகத்தில் மிக சிறப்பாக ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 30 3 2025 ஞாயிற்றுக்கிழமை வரை 8 நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த 3 ஆவது புத்தகத் திருவிழா தற்போது பொதுமக்கள் மற்றும் வாசகர்களின் கோரிக்கையினை ஏற்று மேலும் இரண்டு நாட்கள் 31.03.2025 மற்றும் 01.04.2025 செவ்வாய்க்கிழமை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
எனவே பொதுமக்கள் வாசிப்பின் முக்கியத்துவம் அளித்து புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்.