பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…..
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்கள் வழங்கினார்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களில் நலன் கருதி கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா தெற்கு நகர செயலாளர் கபிலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் பழங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பிரகாஷ், சுமதி கண்ணதாசன், ராமபிரபு, கலியமூர்த்தி, மணிகண்டன் மற்றும் தெற்கு ஒன்றிய மாவட்ட, பேரூர், நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.