மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன் தலைமையிலும், செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணை த் தலைவர் சோலைமலை, மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலையிலும் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சாகுல் அகமது மாற்றுத்திறனாளிகளுக்கும், கண் பார்வை அற்றவர்களுக்கும் மொத்தம் 501 நபர்களுக்கு அரிசியும், பணமும் கொடுத்தார். அவருடைய தாய், மனைவி, குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நிர்வாக தலைவர் பூபதி, இளவரசன், கண் பார்வையற்றோர் அணி தலைவர் கணேசன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன், நாகமலை புதுக்கோட்டை நடிகர், டாக்டர் செந்தில்குமார், தேவி, ரோஸி மற்றும் விழா கமிட்டியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.