கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு என பல்லடம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.
பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் டயப்பர் நிறுவனம் அமைப்பதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் காத்திருப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பல்லடம் உடுமலை பிரதான சாலையின் நடுவே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் சபரி கறி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேசிய வட்டாட்சியர் சபரி கிரி நிறுவனம் குறித்து ஆய்வு செய்து இறுதி முடிவு எட்டும் வரை கட்டுமான படங்கள் நடைபெறக்கூடாது எனவும் இரண்டு காவல் துறையினர் பணிகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிப்பாளர்கள் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார் எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தார் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.