எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் பாசனபிரிவில் துவங்கும் கழுமலையார் வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியை கடந்து உப்பனாறு வழியே கடலில் கலக்கிறது.
கழுமலையார் வாய்க்கால் சீர்காழி நகர் மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களான திட்டை,தில்லைவிடங்கன்,வடக்குவெளி, திருத்தோணிபுரம்,புளியந்தோப்பு உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2515 ஏக்கர் நேரடி பாசனமும் 500 ஏக்கர் கிளைவாய்க்கால் பாசன வசதி என 3000 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் பாசன வசதி பெருகிறது.
சீர்காழி நகர் பகுதியின் பிரதான நீர் ஆதாராமாகவும் விளங்கும் கழுமலையார் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் வறண்டு போய் கிடக்கிது.
நகர் பகுதியில் கழுமலையார் வாய்க்கால் ஆற்றில் இருபுறமும் உள்ள வீடுகள் மட்டுமின்றி குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், திருமண கூடங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் கழிவுநீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே கழுமலையார் வாய்க்காலில் விடப்படுகிறது.
சீர்காழி நகராட்சியில் கழிவு நீரை அகற்றுவதற்கு எவ்வித கட்டமைப்பும் இல்லாத நிலையில் மழை நீர் வடிகால் முழுவதுமாக கழிவுநீர் கால்வாயாக மாற்றி பாசன வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.கழிவுநீர் கலப்பதால் நகர் பகுதி நிலத்தடி நீரின்தன்மை முற்றிலும் மாறிவருகிறது.
கடுமையா் வாய்க்கால் கழுமலையார் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் கழிவுநீர் கலந்த தண்ணீர் வருவதால் உரிய நேரத்தில் சாகுபடி செய்ய முடியாமல் போதிய மகசூல் இன்றியும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேட்டூர் அணை தண்ணீர் மற்றும் மழையின் போது குப்பைகளும்,கழிவு நீரும் அடித்துச் செல்லப்பட்டு கழிவுகள் ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் கடல் வளமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளடுள்ளது.
கழுமலையார் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள் குறித்தும், கழிவுநீர்கலப்பது குறித்தும் பொது பணித்துறையில் புகார் அளித்தும் இதுவரை எவிவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்,எனவே 3000 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கபடுவதை தடுக்க போர்கால அடிப்படையில் கழுமலையார் வாய்க்காலை சீரமைக்க அரசு உரிய நாடவடிக்கை எடுக்க வேண்டும் என கழுமலையார் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.