திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், சோரபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ச.கலைவாணி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபு முன்னிலை வகித்தார். எஸ்எம்சி ஆசிரியர் கலைச் செல்வி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் எம் தரணி பங்கேற்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், கற்றல் திறனுடன் மேம்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.