வேப்பூர் மார் -25
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெற்று வருகிறது
இந்த சென்னை, விழுப்புரம், சந்தையில் வியாழக்கிழமை மாலை ஆறுமணிமுதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை ஆட்டுசந்தையும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை காய்கறி சந்தையும் நடைபெறும்
இங்கு நடைபெறும் ஆட்டு சந்தையில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் வேலூர் அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் மதுரை ராமநாதபுரம் தேனீ உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆடு வியாபாரிகள் ஆடுகளை விற்கவும் வாங்கவும் வருவார்கள்ஆண்டுதோறும் மார்ச் மாதம் வாரசந்தை குத்தகை காலம் முடிந்து, வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் நடத்தப்படும்
அதன்படி 2025 -2026 ஆம் ஆண்டுகான 11 மாத வாரச்சந்தை குத்தகைக்கான ஏலம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ), சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சி செயலாளர் தங்க. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏலம் ஆரம்ப தொகை ரூ.72.00 லட்சத்தில் துவங்கியது. திருப்பெயர் சேகர் தலைமையில் ஒரு அணியும் கொளப்பாக்கம் ராதாகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டி போட்டு ஏலம் கேட்டனர் இதில் திருப்பெயர் சேகர் அணியினர் அதிகபட்சமாக 90 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டதால் ஊராட்சி நிர்வாகம், அவரிடம் ஒப்பந்த ஆணையை வழங்கியது. அவருக்கு ஏலம் கேட்க வந்தவர்கள் பார்வையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்