தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்
கண்டன அறிக்கை கூறியதாவது:
தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லையா .அராஜக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் சமூக செயல்பாட்டாளர் சவுக்கு சங்கர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து வீட்டை சேதப்படுத்தி மிகவும் அருவருக்கத்தக்க நடந்த நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது இது சட்ட ஒழுங்கு சீர்குலைத்துள்ளதையும் காட்டுகிறது தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது காவல்துறை உடனடியாக விசாரணை செய்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை செய்ய வேண்டும் என சிவசேனா கோரிக்கை வைக்கிறது இதன் உண்மை நிலையை உடனடியாக மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்.என வலியுறுத்துகிறோம்.
