விருத்தாசலம்
விருத்தாசலத்தில் ஜி.எஸ்.டி. பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிவா டேக்ஸ் கன்சல்டன்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கத் தலைவர் கோபு தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர்சேட்டு முகமது ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தகர்கள் நல சங்க இளைஞரணி தலைவர் முத்து ஆதவன் உள்ளிட்ட மற்றும் பல வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
வி. ஆர். எஸ், ஜி .எஸ் . டி. அகாடமி நிறுவனர் நீலகண்டன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கினார். வரி ஆலோசகர் பூர்ணா செல்வகுமார், அஸ்வினி ஆகியோர் ஜி. எஸ்.டி பயன்படுத்துவது, ரசீதுகள் பராமரிப்பது சுயமாக ஜி.எஸ்.டி.பதிவு செய்வது வங்கி மூலம் மட்டுமே பணவர்த்தனை செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் விருத்தாசலம் ,திட்டக்குடி ஸ்ரீமுஷ்ணம் பகுதி வர்த்தகர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.