தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்தோணியார் கோயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 38வது வட்ட கழக செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான ஒய்.நவ்சாத் ஏற்பாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். பீர் முகமது ஒலியுல்லா அப்பா தர்கா இமாம் கசாலி துவா செய்து நோன்பு திறந்து வைத்தார்.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான இரா.சுதாகர்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர்,
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ் .ஆர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் சரவண பெருமாள், முனியசாமி, வழக்கறிஞர் செங்குட்டுவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, வடக்கு பகுதி கழக துணை செயலாளர் செண்பக செல்வன், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, இராஜேஸ்வரி, ராதாஆனந்த், மெஜூலா, ஞான புஷ்பம், இந்திரா, சாந்தி, தமிழரசி, முத்துலட்சுமி, விஜயலட்சுமி சுகன்யா,
மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் இம்ரான், துணைச் செயலாளர் அணில் ராஜ், முன்னாள் சிவன் கோவில் அறங்காவலர் தங்க மாரியப்பன், வட்டச் செயலாளர்கள் சந்தன பட்டு, சொக்கலிங்கம், ஜெயக்குமார், ஈஸ்வரன், பொன் சிங், நிர்வாகிகள் அசோகன், கனகவேல், ரஹ்மத்துல்லாபுரம் ராஜா, ரியாஸ் அகமது, தளவாய் ராஜ், சுப்பிரமணியன், முருகேசன், சிவபெருமாள், மைதீன் மற்றும் பால ஜெயம் சாம்ராஜ் சகாயராஜா, ஆனந்த் ,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நவ்சாத் செய்திருந்தார்.