பாபநாசம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா….
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து ஆடிய குழந்தைகள்……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருவலஞ்சுழியில் முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.விழாவில் மாணவ மாணவிகள் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடியும் ,நடன இயக்குனர்களுக்கு நிகராக மாணவர்கள் நடனமாடி அசத்தினர்.நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.