தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங் தலைமை வகித்தாா். அகஸ்டின், ஜோசப், டெலஸ்பா், சகாயராஜ், புல்டன் ஜெசின், டெரன்ஸ், அந்தோணியப்பா, பெவின், அமல்ராஜ், மில்லை ராஜா, பெலிக்ஸ், ேஜடியம்மா, ரத்தினம், மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனா். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வரவேற்புரையாற்றினாா்.
மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 1500 பேருக்கு தையல் மிஷின் கிரையன்டர், எவர்சில்வர் குடம், அாிசி வேஷ்டி சேலை, அலுமினிய டவேரா, ஆகியவற்றை வழங்கி பேசுகையில் “அதிமுகவை தொடங்கி எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினாா்.
அவரது மறைவிற்கு பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக பணியாற்றி அவர் வழியிலேயே முதலமைச்சராக இருந்த காலம் வரை மக்கள் நலன்கருதி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மடிக்கணினி சைக்கிள் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் பணம் மிக்ஸி மின்விசிறி போன்ற பல்வேறு நல்லத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் நலன் கருதி வாழ்ந்தாா்.
ஜெ மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் ஜெயலலிதா வழியில் மக்கள் ஆட்சி நடத்தினாா் எடப்பாடியாா் தற்போது தமிழகத்தில் தேவையற்ற செயல்களும் சம்பவங்களும் அதிகாித்து கொண்டே செல்கின்றன. இதை காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். ஓவ்வொரு தாய், தந்தையாரும் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திசை மாறிவிட்டால் வாழ்க்கை சேர்ந்து விடும் பொறுமை அடக்கம் விட்டுக் கொடுத்தால் போன்ற இல்லாத நிலை இருப்பதை கண்டு மனம் வேதனை அடைகிறேன் எதிர்வரும் 2020 ஆறில் தேர்தல் நமக்கு முக்கியம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி எடப்பாடி கே பழனிச்சாமி. மீண்டும் முதலமைச்சர் ஆக உழைக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம். வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன். பகுதி இணைச் செயலாளர் வீரக்கோன். முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன். அன்புலிங்கம் பாலசுப்ரமணியன் மாவட்ட பெண் நிலைகள் அந்தோணி சேவியர். செல்லப்பா வட்டச் செயலாளர்கள் சகாயராஜ் அருண்குமார் அந்தோணி ராஜ் முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி. கோட்டாளமுத்து. முருகேசன். ஜெகதீஸ்வரன். கோபி. சகாயராஜ். மாரியப்பன் கெய்னஸ். முன்னாள் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை ராஜா சிங். முன்னாள் மாவட்ட ஜே பேரவைஇணை செயலாளர் ஜெபசிங். போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் பெலிக்ஸ் சங்கர். கருப்பசாமி. ராஜேந்திரன். சகாயராஜ். மின்சார பிரிவு ரவி. சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ். பிரபாகர். அபுதாஹிர். மாவட்ட மகளிர் அணி சாய் சுதா. பெருமாள் தாய். முத்துலட்சுமி. ரேக்ஸி. உறுப்பினர் பல கலந்து கொண்டனர் பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அரசன் நன்றி யுரைற்றினார்.