அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அணி வகுப்பு நடந்தது. வெங்கடேசன் எம்.பி பங்கேற்பு.

மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, நடைபெற்ற அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மதுரை எம். பி வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுரை யில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளான்று செந்தொண்டர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில், மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா ஜல்லிக்கட்டு சிலை அருகில் இருந்து துவங்கியது. இதனை எம்.பி வெங்கடேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மத்திய பகுதிக்குழு செயலா ளர் பாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் ஜென்னியம்மாள், குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பேரணி மேல பொன்னகரம் மெயின் ரோடு, பாரதியார் ரோடு, கரிமேடு மார்க்கெட் வழியாக மாநாடு நடைபெறும் தமுக்கம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்குள்ள கொடி மரத்தில் மூத்த தலைவர் பால்சாமி செங்கொடி ஏற்றினார். முன்னதாக அணிவகுப்பில் 24 கொடிகளை தொண்டர்கள் ஏந்தி வந்தனர்.

மதுரை எம்.பி வெங்கடேசன் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏப்ரல் 2ல் துவங்கி 5 நாட்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கார்ப்பரேட் டுகளால் மக்களின் வளங் கள் கொள்ளையடிக்கப் படுகிறது. இந்தியாவின் அனைத்து வளங்களும் குடிமக்களுக்கு சொந்தம் என்பதை, இந்த நாட் டில் மதவெறியர்களுக்கு உணர்த்துவோம். கம்யூ னிஸ்டுகளின் மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதுடன், பல்வேறு மாநில முதல்வர்கள் மாநில உரிமை சார்ந்த கருத்தரங் கில் பங்கேற்பர். ஏப்ரல் 6ம் தேதி 30 ஆயிரம் தொண் டர்கள் பங்கேற்கும் செம்படை பேரணி மற்றும் 2.50 லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்’ என்றார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *