கமுதி காளியம்மன்கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பகுதியில்,
அருந்ததியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 2-ம் தேதி
நடைபெற்றது.
பின்னர் அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று, 48 நாட்கள் முடிவுற்ற நிலையில், நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா கோவில் முன்பு நடைபெற்றது. விழாவிற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்ட யாகசாலை முன்பு புனித நீர் கும்பங்களில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் 108 சங்குகள் வைத்து,பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில், ஏராளமான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,யாகசாலை வேள்வி வளர்க்கப்பட்டு அதில் ஏராளமான மூலிகை பொருட்கள் கொட்டப்பட்டு வேள்வி வளர்த்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டதை கண்டு ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது
மேலும் பால், தயிர், சந்தனம்,பன்னீர் உட்பட ஏராளமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இவ்விழாடிரஸ்டிகள் தலைமையில், கமிட்டியார்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழா முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருந்ததியர் உறவின் முறையினர்
செய்திருந்தனர்.