காஞ்சிபுரம்
சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மூன்று அலகுகளின் சார்பாக “ஏழு நாள் சிறப்பு முகாம்” துவக்க விழா முத்தையால் பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இரா. ஹரிகிருஷ்ணன் அவர்கள் இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அதன் பிறகு பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் அவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகங்களின் சிறப்பம்சம், அது எவ்வாறு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் சேவை செய்ய வேண்டும் நாட்டு நலப்பணித் திட்ட செயல்பாடுகள் எவ்வாறு மாணவர்களின் ஆளுமைத் தன்மையை உயர்த்த உதவுகிறது என்பதை விரிவாக தனது தலைமை உரையில் எடுத்துக் கூறினார்.
அதன் பிறகு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் R. பிரேமா ரஞ்சித் குமார் மற்றும் முத்தையால் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் P. அன்பழகன் அவர்கள் இந்த முகாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் ஊராட்சி கிராமத்தில் நடந்து வருகின்றது என்றும் இந்த முகாம்கள் மூலமாக இலவசமாக பொதுமக்கள் கண் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று புகழ்ந்து கூறினார். மேலும் பொது மக்களுக்கு கண் தானம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் துஷ்பிரயோகம், குழந்தைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக எங்கள் கிராமத்தில் செய்து வருகின்றனர் என்று மகிழ்வுடன் கூறினார்.
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் முனைவர் ந. பழனிராஜ் மற்றும் முனைவர் வ. அண்ணாதுரை அவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட சேவைகளை எவ்வாறு மாணவர்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். அடுத்து இந்த ஏழு நாள் சிறப்பு முகாமின் சிறப்பம்சங்களை விரிவாக நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் இரா. ரவீந்தர் அவர்கள் எடுத்துக் கூறினார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் க. கௌரிசங்கர் அவர்கள் முகாமில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வருக்கும், கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர் அவர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி கூறினார்.