தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பத்தில் தான் தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குளம்அருகில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தெப்பத்தை பார்வையிட குழந்தைகளுடன் வருகின்றனர் அந்த தெப்பத்தில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளது இந்த நிலையில் தெப்பக்குளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமர்ந்து மீன்களை பார்வையிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது
இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் தெப்பத்தை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார் அதன் பின்பு கூறுகையில் தூத்துக்குடி மாநகரில் மக்கள் அதிக அளவில் கூடுகின்ற பூங்காக்கள் அதிகளவில் மாநகராட்சி உருவாக்கி தருகிறது பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த தெப்பக்குளம் ரொம்ப நாளாக சீர் செய்யாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது நிறைய மீன்கள் உள்ளது சிறு குழந்தைகள் பெரியவர்கள் அதனை பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்
தெப்பக்குளம் சுற்றி மின்விளக்குகள் பொதுமக்கள் அமர்ந்து மீன்களை ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது விரைவில் இந்த பணிகள் துவங்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார் உடன் சண்முகபுரம் பகுதி திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன் மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி மற்றும் திமுகவினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்