பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “எங்கே செல்லும் இந்த பாதை “என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் பகுத்தறிவாளர் நிர்வாகி வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக நிர்வாகி பெரியார் கண்ணன் வரவேற்று பேசினார்.
இந்த கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பகுத்தறிவாளர் கழக குடந்தை கழக மாவட்ட செயலாளர் சேதுராமன் மற்றும் திராவிடர் கழக தலைமைக் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், ஆகியோர் கலந்து கொண்டு எங்கே செல்லும் இந்தப் பாதை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மோகன் மாவட்ட செயலாளர் துரைராஜ் பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ஆனந்தகுமார் நன்றி கூறினார்.