கோவில் கும்பாபிஷேக விழா” மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக மிக கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாகி சக்தி வசந்தி அம்மாள், விழா கமிட்டியாளர்கள் கே.பசும்பொன், சரவணன், கே.மகேஸ்வரன், சமூக சேவகர் பி.தங்கபாண்டி, கே.கணேசன், டி.கேசெந்தில்குமார், ஈ.செல்வபிரகாஷ், மணிகண்டன், ஆர். மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அன்னதான நிகழ்ச்சியை 46 வது வார்டு கவுன்சிலர் பி. விஜய லெட்சுமி பாண்டியன், 47 வது வார்டு எம்.பானு முபாரக் மந்திரி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வாழ்த்துக்கள் கூறினார்.