திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்க இளைஞர் அணி மாநிலத் தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் முன்னிலையில், வலங்கைமான் கிராம நிர்வாக அலுவலர் துர்கா நீரின் அவசியத்தை பற்றியும், மழைநீர் சேகரிப்பு, நீர் சிக்கனப்படுத்துதல், நிலத்தடி நீர், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றைப் பற்றி பேசினார். சிறப்பு அழைப்பாளராக வலங்கைமான் வட்டாட்சியர் ஓம். சிவகுமாரன் கலந்துகொண்டு வலங்கைமான் காருண்யா தையல் பள்ளி மாணவிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தண்ணீர் குடம் பரிசாக தந்து வாழ்த்துரை வழங்கினார்.
இதில் தையல் பள்ளி மாணவிகளும், தையல் தொழிலாளர்களும், சங்க உறுப்பினர் குமார், ஜமாலி ஜாமியா மஸ்ஜித் மோதினார் இஸ்மத் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.