போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் சித்ரா தண்டபாணி தலைமையில் நகரின் இதய பகுதியான தேவர் சிலை ரவுண்டான முன்பு கருப்பு கொடி ஏந்தியும் தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரளா முதல்வர் பினராயி விஜயன் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் ஆகியோர் தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசான தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றதை கண்டித்து கருப்பு கொடி காட்டப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் ஆகியோருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் போடி நகர பாஜக பொதுச் செயலாளரும் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலருமான எஸ் மணிகண்டன் உள்பட நகர பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் முன்னாள் நகர பொதுச் செயலாளரும் நகரத் தலைவரின் கணவருமான தண்டபாணி நன்றி கூறினார்