எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து சீர்காழி தபால் நிலையம் எதிரே தமிழக விவசாய சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக காவிரி விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்பொழுது அவரை பஞ்சாப் அரசு தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. இதை கண்டிக்க வகையிலும் பி ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய கோரியும் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு . மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் முருகேசன் விவசாய சங்க நிர்வாகி கோவி. நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பஞ்சாபில் கைது செய்யப்பட்ட பி ஆர் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சம்பந்தம், சத்தியமூர்த்தி, திலகர், இனியவன், வரதராஜன் ,மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.