பெரம்பலூர்.
வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, கழக அமைப்புச்செயலாரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இரா.தமிழ்செல்வன் அகியோர்கள் தலைமையிலும் . வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பூத் கமிட்டி ஆய்வு பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன், அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பி.நாகராஜன்,வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் காவியா ரவி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமால் மருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தம்பை தர்மராஜ், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.