கார்ப்பரேட் வர்த்தக அதிகரிப்பால் மீண்டும் ஒரு சுதந்திர போர் வர வாய்ப்புள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தால் மட்டுமே வணிகர்கள் நலன் காக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா கோவையில் தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை வடக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் கோவை மஹேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில் மாநில பொது செயலாளர் ராகவேந்திர மணி, மாநில பொருளாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் சீமான் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட மகளிரணி தலைவி ரேவதி பீட்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைமை விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு மாநில, மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகளிடையே ஆலோசணை மேற்கொண்டார். அப்போது வரும் மே 5 ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள 42 வது மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா, தற்போது வணிகர்கள் மீது சுமத்தியுள்ள வரி சுமையை அரசு திரும்ப பெற்று பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும், சிறு வணிகர்களின் வியாபாரத்தை பாதித்து வரும் கார்ப்பரேட் வர்த்தகத்தால் மீண்டும் ஒரு சுதந்திர போர் வர வாய்ப்புள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முன் வரவேண்டும் என்றும், டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்து, மதுவாங்குவோர்களுக்குஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்க வேண்டும் என்றும், பல இடங்களில் நடைபெறும் சில சந்தைகளால் அரசுக்கு வரி, மற்றும் கட்டிடத்திற்கு வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை முறையாக செலுத்தும் வணிகர்கள் பாதிக்கபடுவதாகவும் இந்த சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஓட்டர் ராஜா, நவநீதகுமார், மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் தேனி பிரவீன், வடக்கு மாவட்ட கார் டீலர் அசோசியேசன் மணிகண்டன், ரத்தினபுரி வணிகர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் ஜெயசீலன் உட்பட கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Share this to your Friends