துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய பாஜக பெண் நிர்வாகி மீது துறையூர் காவல் நிலையத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் புகார் அளித்தனர்.
துறையூர் பண்டரிநாதன் தெருவில் வசிக்கும் பொறியாளர் கிருபானந்தனின் மனைவி கமலி (35).இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளராக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் (மார்ச் -19) தன்னுடன் பாஜகவினர் சிலரை அழைத்துக் கொண்டு திருச்சி ரோடு, பாலக்கரை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டிய “அண்ணன் சொல்வார் தங்கை செய்வார்” என்ற தலைப்பில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து 20/03/2025 அன்று டாஸ்மாக் கடை மேலாளர்கள் முருகேசன் , செந்தில்குமார் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை களங்கப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் போஸ்டர் ஒட்டிய பாஜக பெண் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையனிடம் புகார் அளித்தனர்.
அப்போது மாவட்ட திமுக பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ. சரவணன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நரேஷ் குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர துணை செயலாளர்கள் இளங்கோவன், பிரபு,மாவட்ட பிரதிநிதி மதியழகன், கார்த்திகேயன் ,பொருளாளர் சீனிவாசன்,நகர் மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன்,ரெங்கநாதபுரம் கார்த்திக், செங்கை பெரியசாமி, சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபிக், அன்பு காந்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் காவல் நிலையம் வந்து தமிழக முதல்வரை களங்கப்படுத்தி போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் முத்தையனிடம் கேட்டு கொண்டனர்.இதனால் பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
Leave a Reply