தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்றது
முகாமில் சிறப்பு விருந்தினராக நேஷனல் இன்சூரன்ஸ் டிவிஷனல் மேனேஜர் சரவணன் ,என்எல்சி(ACM HR) சதீஷ்குமார் ,மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் (பொறுப்பு) செல்வபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவண வேல் மருத்துவ விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் விடால் இன்சூரன்ஸ் ஜெயபால் , சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று என் எல் சி ஓய்வூதியர்களை பரிசோதித்தனா்.
என் எல் சி ஓய்வூதியர் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனைகள் செய்யப்பட்டது
முகாமிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளனர்.
Leave a Reply