கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகாரா மஹாலில் மார்ச் 19 புதன்கிழமை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்க நிகழ்விற்கு தோழர் M.G. நாகேஷ் பாபு ஓசூர் மாநகர செயலாளர் தலைமை வகித்தார். தோழர் P.நாகராஜ் ரெட்டி, தோழர் C.P.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோசலிச அமைப்பும் பெண்களும் என்கின்ற தலைப்பில் அகில இந்திய மாதர் சங்கத்தின் முக்கிய தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாகிய தோழர் உ.வாசுகி அவர்கள் கருத்துரை வழங்கினார்.
நில உரிமையும் கம்யூனிஸ்டிகளின் பங்கும் என்கின்ற தலைப்பில் மலைவாழ் மக்களின் வாச்சாத்தி போராட்டத்தின் களப்போராளி தோழர் பி.டில்லி பாபு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருத்துரை ஆற்றினார்.
இளைஞர்களும் வேலை வாய்ப்பும் என்கின்ற தலைப்பில் தோழர் சி.சுரேஷ் சிபிஐ(எம்) கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கருத்துரையாற்றினார்.
மேலும் இந்தக் கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி கமிட்டிகளின் சார்பில் அகில இந்திய மாநாட்டிற்கான நிதி மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு தோழர்கள் R.சேகர், G.K.நஞ்சுண்டன், C.பிரகாஷ், ஜேம்ஸ் அஞ்சலா மேரி, K.மகாலிங்கம், லெனின் முருகன், R.நடராஜன் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் P.தேவராஜன், G.பெரியசாமி, R.சபாபதி, K.சாமு, D.ராஜா, C.முருகன், D.சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் கட்சி உறுப்பினர்கள், பெண்கள், மற்ற அரங்க பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தோழர் R.K.தேவராஜ் ஓசூர் ஒன்றிய செயலாளர் நன்றியுரை வழங்கி கருத்தரங்கை நிறைவு செய்தார்.
செய்தியாளர்
G.B. மார்க்ஸ்
Leave a Reply