எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு அப்பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சீர்காழி நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளிலும் நாள்தோறும் வீடுகள்,கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து நகராட்சி குப்பைகிடங்கில் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று சேர்கின்றனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் இது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி தூய்மை பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் காலை முதல் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுவந்தனர். ஆனால் தனியார் ஒப்பந்ததாரர் தான் சம்பளம் வழங்கவேண்டும் எனவும், அதற்கான தொகை காசோலையாக ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனியார் ஒப்பந்ததாரர் கடந்த மாதத்திற்கான சம்பள வழங்கவேண்டிய தொகையில் பாதியளவு மட்டுமே நகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளதாக தூய்மைபணியாளர்களிடம் தெரிவித்துள்ளராம்.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைபணியாளர்கள் மாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகம் முன்பு உள்ள சாலையில குறுக்கே அமர்ந்து சாலைமறியலில் ஈடுப்பட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல்.பாலசந்திரன் மற்றும் போலீஸôர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி ஆணையர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகளை அழைத்து காவல்துறையினர் விவரங்களைகேட்டு தனியார் ஒப்பந்ததாரர்,நகராட்சி நிர்வாகம் பேசி முடிவு செய்து விரைந்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவையை வழங்கிடவேண்டும் என தெரிவித்து தூய்மைபணியாளர்களிடம் அதற்கான உத்தரவாதத்தினை அளித்தனர்.இதனால் மறியலை கைவிட்டு தூய்மைபணியாளர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Leave a Reply