தஞ்சாவூா்,
தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் கரந்தை தமிழ்ச் சங்கம் செயலாளர் சுந்தரவதனம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் வழி படித்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் துரை சிங்கம், கரந்தை கலைக்கல்லூரி முதல்வர் ராஜாமணி, தமிழ் புலவர் கந்தசாமி, திருவையாறு அவ்வை கோட்டம் கலைவேந்தன், ஏடகம் அமைப்பின் உறுப்பினர் ஜெயக்குமார், புலவர் திருநாவுக்கரசு, தமிழ் கலை பண்பாட்டு துறை முன்னாள் துணை இயக்குனர் குணசேகரன், காவிரி உரிமை மீட்பு குழு துரை.ரமேசு மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Leave a Reply