அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அலங்காநல்லூர் தெப்பக்குளம் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பெருமாள் மற்றும் முருகன் சுவாமிகளுக்கு நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாவட்ட தலைவர் அழகாபுரிபார்த்திபன், மாவட்ட செயலாளர் அய்யூர்தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் நல்லையன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Leave a Reply