பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்தியா விஜயன் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும் பட்டா மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரருடன் ஆஜராகி கும்பகோணம் சார் ஆட்சியர் முன்னிலையில் நேர்முக விசாரணை நடைப்பெற்றது.

இதில் மனுதாரர் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ்,வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி,சரக வருவாய் ஆய்வாளர் சுந்தரேஸ்வரன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்,வட்ட சார் ஆய்வாளர் ரேணுகா மற்றும் அனைத்து கிராம் நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Share this to your Friends