கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டரை கட்டிய பாஜக மாவட்ட செயலாளரா ல் பரபரப்பு …….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட தரவுத்தள செயலாளருமாக பாஜகவை சேர்ந்த சசிரேகா ரமேஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக அரசு டாஸ்மார்க் ஊழலை செய்ததாக தெரிவித்தும் அதனை எதிர்த்தும் பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாஜக வார்டு கவுன்சிலரும் தரவு தல மாவட்ட செயலாளருமான சசி ரேகா ரமேஷ் பல்லடம் தாராபுரம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் முன்பு இது அப்பா கடை என்ற வாசகம் எழுதிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை கட்டி தொங்க விட்டார்.
மேலும் டாஸ்மார்க் ஊழலுக்கு எதிரான தான் இந்த போஸ்டரை கட்டியுள்ளதாகவும் எல்லா அரசு அலுவலகங்களிலும் முதல்வர் படம் உள்ள நிலையில் தமிழக அரசுக்கு அதிகம் வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் கடையிலும் முதலமைச்சர் படம் வைக்க வேண்டும் என இந்த போஸ்டரை கட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply