அரியலூர், அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிகாடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமை அக்கல்லூரியின் முதல்வர் வீ.வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். முகாமில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் கே.சந்திரசேகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் என 600}க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த வகைப் பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் ரத்ததானம் அளிக்க வந்த தன்னார்வலர்களிடம் 63 யூனிட் ரத்தம் சேகரித்து, அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.ஆதிலட்சுமி, வேதியியல் துறை பேராசிரியர் ந.ராஜா மற்றும் சக பணியாளர்கள் செய்திருந்தனர்.
Leave a Reply