கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு
சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக மாநில மாநாட்டை நடத்தி முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக தமிழ்நாடு குரும்பா சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி கோவையில் தெரிவித்துள்ளார்…
கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாவட்ட,மண்டல குரும்பா குருமன்ஸ் இன மக்களின் அரசியல் எழுச்சி மாநாடு மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது..
முன்னதாக வள்ளிக் கும்மி நிகழ்ச்சியிடன் துவங்கிய மாநாட்டில் மாவட்ட குரும்பா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்ட குரும்பா சங்க தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன ,பொருளாளர் கிருஷ்ணசாமி,ஆகியோர் முன்னாள் வகித்தனர்..
இதனை தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற மாநாட்டை தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்..
இதில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஒன்னப்பன்,சிறப்பு கருத்துரையாளர் முத்துச்சாமி,மக்கள் சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தமிழ்நாடு குரும்பா சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது பேசிய அவர் குரும்பா சமூக மக்கள் தங்களது கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாக கூறிய அவர்,ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் சரி வர கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்..
குறிப்பாக குரும்பா சமூக மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடிப்பதாகவும்,தற்போது பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் குறைந்த சதவீதம் இருப்பதால் குரும்பா சமுதாய மக்கள் உயர் கல்வி படிக்கவும்,அரசு வேலை வாய்ப்பு பெறுவதிலும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்..
மேலும் சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என கூறிய அவர்,வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக மாநில மாநாட்டை நடத்தி எங்களது முடிவை அறிவிக்க இருப்பதாக கூறினார்..
குரும்பா சமூக மக்களின் சமூக நீதி உரிமைக்காக போராடுவது தான் வழி என்றால் குரும்பா சமூகம் அதற்கு தயாராக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்…