எதிர்கட்சியாக இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் துவக்க விழாவில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

அப்போது பேசிய அவர்,எதிர் கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறிய அவர்,இதற்கு எதிர் கட்சியாக முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வர் எடுத்துள்ளதை சுட்டி காட்டிய அவர்,தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர்,காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறிய அவர்,இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்..

இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறிய அவர்,இந்தியாவில் அமைதி நில 140 கோடி இந்திய மக்களும் வேற்றுமைகளை கலைந்து ஒற்றுமையாக இருப்பது தற்போது அவசியம் என குறிப்பிட்டார்..

கடந்த சில நாட்களாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,இந்தியாவிலேயே சாதி மதங்களை கடந்து அனைவருக்குமான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்..

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *