கோவை இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்பு முன்னேற்பாடுகளுடன் தொடங்கியது.
இந்த பயிற்சியில் திரளான மாணவியர்கள் பங்கேற்றனர். அவர்கள் கைத்தறி நெசவின் ஆழமான புரிதலையும், பாரம்பரிய கலைகற்றலின் ஆனந்த அனுபவத்தையும் பெற்றதாக தெரிவித்தனர்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அவிநாசிலிங்கம் இல்ல அறிவியல் மற்றும் உயர்கல்வி நிறுவத்தின் ஆடையியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையின் பேராசிரியை மற்றும் ஹோம் சயின்ஸ் பள்ளியின் டீன் திருமதி எஸ். அம்சமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் நிறுவனர் திரு கைத்தறி J. முருகேசன், நிர்வாக அதிகாரி முனைவர் மா. ஹேமலதா, டிசைனர் திரு M. தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
உலக டெக்ஸ்டைல் தினமான இன்று இந்த பயிற்சி மாணவியருக்குப் பெருமை அளிக்கக்கூடிய அனுபவமாக அமைந்தது. வீட்டிலிருந்தே மாதம் ரூ.20,000 முதல் ரூ.2 லட்சம் வரைக்கும் வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கும் இந்த பயிற்சி, பலர் ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.